Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514

Karma
Top » Temples »

முருகன் திருத்தலங்கள் »
 
style="padding-left:0px;padding-right:0px;" >
Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514

031. திருமலைகுமாரன் - திருநெல்வேலி - தமிழ்நாட&
 
திருமலை குமாரசுவாமி

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம்.

சுவாமி : குமாரசுவாமி

தீர்த்தம் : அஷ்டபத்ம குளம் (பூஞ்சுனை)

திருத்தலச் சிறப்புகள் : பந்தள மன்னர் எழுப்பிய சபரிமலை ஐயப்பன் கோயில் போன்று கேரள எல்லையில் உள்ள திருமலைக் கோயிலையும் பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள் தான் எழுப்பியுள்ளனர். இக்கோயில் உருவாக காரணமாக இருந்த பூவன் பட்டரின் வேண்டுகோளின்படி பந்தள மன்னர் இக்கோயிலை எழுப்பியுள்ளார். இவ்வூரைச் சுற்றி ஐயப்பன் தலங்களான ஆரியங்காவு, அச்சன்கோயில், குளத்துப்புழை போன்ற தலங்கள் அமைந்துள்ளது.

 திருத்தல வரலாறு : ஒருகாலத்தில் திருமலைக்கோயிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. இங்கு பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் வேலுக்கு அபிஷேகம் மற்றும் பூசைகளைச் செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூசையை முடித்து விட்டு ஓய்வுக்காக ஒரு புளியமரத்தடியில் படுத்திருந்தார். அப்போது முருகப்பெருமான் கனவில் எழுந்தருளி பட்டரே! இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன் நீர் அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப் பாரும். அதற்குள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்றார். அதன்படியே அரசருக்கு தகவல் தெரிவித்த பூவன்பட்டர் முருகன் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தார்.

 இக்கோயில் அர்ச்சகர் பூவன்பட்டர் கோட்டைத்திரடு சென்று முருகன் சுட்டிக்காட்டிய இடத்தை அகழ்ந்த போது முருகன் சிலையில் மூக்கில் கடப்பாரை பட்டு சிறு துளி உடைந்து விட்டது. அந்த உடைசல் கூட பார்ப்பதற்கு அழககாக இருந்தது. அப்பகுதி மக்கள் முருகனுக்கு மூக்கன் என்ற திருநாமம் வழங்கி வழிபடுகின்றனர்.

குழந்தை பிறந்து, தொடர்ந்து இறந்து கொண்டே இருந்தால் மூக்கு குத்தி மூக்கன் என பெயரிடுவதாக வேண்டிக்கொண்டால் அந்த குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்பது நீண்டகால நம்பிக்கை. ஆண் குழந்தைகளும் மூக்கு குத்தியிருப்பதை இப்பகுதியில் காணமுடியும். இரண்டு குழந்தைகள் தவறி மூன்றாவது பிறக்கும் குழந்தைக்கு இந்தச் சடங்கை செய்வது மரபாக உள்ளது.

இத்தலத்தின் அருகிலுள்ள அச்சன்புதூரில் சிவகாமி அம்மையார் வசித்து வந்தார். இவரது கணவர் கங்கைமுத்து தேவர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இருவரும் திருமலை முருகனை வணங்கி குழந்தை வரம் வேண்டினர். கோயிலில் கல் மண்டபம் ஒன்றை அமைக்கவும் அவர் முடிவெடுத்தார். இதற்கான கற்களை அடிவாரத்தில் இருந்து வாழை மட்டையில் ஏற்றி மேலே இழுத்துச் செல்வார். அப்படிப்பட்ட வைராக்கியமான பக்தி அவர்களுடையது. இவ்வளவு சேவை செய்தும் அவருக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கவில்லை. தான் கட்டிய கல்மண்டபத்தில் வந்து தங்கிய வரதர் மஸ்தான் என்ற மகானிடம் தன் குறையைத் தெரிவித்தார்.

 அந்த மகான் அவரிடம் இந்த திருமலை முருகனையே உன் குழந்தையாக ஏற்றுக்கொள் என்றதும் அவருக்கே தன் சொத்துக்களை எழுதி வைத்தார். மேலும் புளியரை என்ற கிராமத்தில் முருகனுக்கு சொந்தமாக இருந்த சொத்துக்களை அனுபவித்து வந்த சிலர் மீது திருவனந்தபுரம் ஐகோர்டில் வழக்கு தொடர்ந்து கல்வெட்டு ஆதாரங்களைக் காட்டி அவற்றை மீட்டு தன் பிள்ளையான முருகனுக்கே சேர்த்தார். இந்த கல்வெட்டின் நகல்படிவம் இப்போதும் உள்ளது. இந்த அம்மையார் முருகனுக்கே தொண்டு செய்து துறவு பூண்டதால் சிவகாமி பரதேசி அம்மையார் என்று அழைக்கப்பட்டார்.

கோயில் அமைப்பு : திருமலை 500 அடி உயரமுடையது. 544 படிகள் ஏறி கோயிலை அடையவேண்டும். இதை திரிகூடமலை என்றும் சொல்வார்கள். இரண்டு மலைகள் இந்த மலையினை தொட்டு கொண்டிருப்பது போல் தோன்றுவதால் இந்த பெயர் ஏற்பட்டது. மலைப்பாதையின் துவக்கத்தில் வல்லபை விநாயகர் சன்னதி உள்ளது. இவரை வணங்கி, அடிவாரத்திலுள்ள பாதமண்டபத்தை தரிசித்து படியேற வேண்டும். இரண்டு பாதங்கள் இந்த சந்நிதியில் உள்ளன. பாதையின் நடுவில் நடுவட்ட விநாயகர் சன்னதி உள்ளது பின்னர் இடும்பன் சன்னதியை வணங்க வேண்டும்.

 மலைஉச்சியிலுள்ள கோயிலின் தீர்த்தத்தை அஷ்ட பத்ம குளம் என்று அழைக்கின்றனர். இந்த குளத்திற்கு தற்போது பூஞ்சுனை என பெயரிட்டுள்ளனர். இங்கு இலக்கியங்களில் நாம் படித்த குவளை என்னும் மலர் இதில் பூத்தது. தினம் ஒரு மலர் தான் இந்தக் குளத்தில் பூத்ததாம். அதை கரையில் இருந்த சப்த கன்னிமார் எழுவரும் முருகனை பூசித்தனர். சப்த கன்னியர் சிலை சிவாலயங்களில் மட்டுமே இருக்கும். முருகன் தலமாக இருந்தாலும் இங்குள்ள தீர்த்தக்கரையிலும் சப்த கன்னியர் இருப்பது சிறப்பு. உமையவளின் ஏழு சக்திகளே சப்த கன்னியர் ஆவர்.

 மேலும் மலையின் உச்சியில் உச்சி பிள்ளையார் சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் 16 கல் படிகள் உள்ளன. இவரை க்ஷோடச விநாயகர் என்பர். 16 படிகள் ஏறி தரிசிப்பதால் இவரை வணங்குவோருக்கு பதினாறு செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 விஷாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தக் கோயிலுக்கு வாழ்வில் ஒரு முறையாவது வந்து செல்ல வேண்டும். விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி நளமூலிகை திருமலைச் செடி ஆகிய மூலிகைகளும் வளர்ந்தன. செல்வ விருத்திக்காக திருமலை செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பூசை செய்திருக்கிறார்கள். இன்று இந்த மூலிகைகளை அடையாளம் காண முடியாவிட்டாலும் இங்கு சென்று வந்தவர்களின் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பது நம்பிக்கை. 'வி' என்றால் மேலான என்றும் 'சாகம்' என்றால் ஜோதி என்றும் பொருள்படும். விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரகணங்களை கொண்டது. இந்த கிரணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால் விசாக நட்சத்திரத்தினர் ஆயுள் முழுவதும் சென்று வழிபடுவதற்கு ஏற்றது என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.
 
அருகிலுள்ள விமானதளம் : மதுரை

ரயில் நிலையம்   : செங்கோட்டை

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Tell a Friend
Print Frindly View

© Copyright 2018 Karma.org.in, Powered by Brilliant ID Systems
Best Viewed in IE 7, FF3, Safari 3.1